இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா! சைப் அலிகானின் முதல் தோற்றத்தை வெளியிட்டது படக்குழு.

தமிழில் வெற்றி கண்ட விக்ரம் வேதா திரைப்படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் முன்னதாக ஹ்ரித்திக் ரோஷனின் தோற்றத்தை வெளியிட்ட படக்குழு தற்போது சைப் அலிகானின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது....

இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா! சைப் அலிகானின் முதல் தோற்றத்தை வெளியிட்டது படக்குழு.

பொதுவாகவே ஒரு மொழியில் எடுக்கப்பட்ட திரைப்பட வெற்றி பெரும்பட்சத்தில் அதனை ரீமேக் செய்வது வழக்கம். அதுபோல நிறைய படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா திரைப்படம் வெளியானது. அந்த படம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இன்றும் பேசப்படுகிறது.

தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கானும் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகானும் நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு அமீர் கான் சில காரணங்களால் விலகினார். அவருக்கு மாற்றாக ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவிருப்பதாக கூறினர். 

தமிழில் வெற்றி கண்ட விக்ரம் வேதா திரைப்படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் முன்னதாக ஹ்ரித்திக் ரோஷனின் தோற்றத்தை வெளியிட்ட படக்குழு தற்போது சைப் அலிகானின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.

அதில் அவர் வெள்ளை நிற டீ-சர்டில் நீல நிற ஜீன்ஸும்  குளிங் கிளாஸும் அணிந்து மாஸாக இருக்கிறார். இத்திரைப்படம் தமிழில் புஷ்கர் காயத்திரி இயக்கத்தில், ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவானது. ஹிந்தியிலும் அதன் ரீமேக் புஷ்கர் காயத்திரி இயக்க ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட், பிரைடே பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை செப்டம்பர் 30 - ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.