திடீரென இன்ட்ஸ்டாவில் நுழைந்த விஜய்..! காரணம் என்ன?

திடீரென இன்ட்ஸ்டாவில் நுழைந்த விஜய்..! காரணம் என்ன?

நடிகர் விஜய் தற்போது சமுக வலைத்தளமான  டிவிட்டரில் மட்டுமே  தன் கருத்துக்களை அவ்வப்போது  பதிவு செய்த வரும் நிலையில்
இன்ட்ஸ்கிராமிற்கு  வந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

திடீரென இன்ஸ்டாவுக்குள் நுழைந்த நடிகர் விஜய்க்கு  நொடிக்கு நொடி லைக், கமெண்ட், மற்றும் , ஃபாலோவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விஜய்  சிரித்தவாறு இருக்கும் போஸ்ட் ஒன்றை  பதிவிட்டும்  பேட்ஸ்டுக்கு கீழே ஹலோ நண்பா அன்ட் நண்பி என சிரித்தபடி ஸ்மைலி படத்தையும் கமெண்டாக பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவிற்குள் நுழைந்த இரண்டு மணிநேரத்திற்குள்ளேயே 1 மில்லியன் ஃபாலோயர்களையும் பெற்றுள்ளார் விஜய்.

பின்னர் இந்த  போஸ்ட்க்கு  சுமார் 50  நிமிடங்களிலே  4 லட்சத்திற்கும் மேலான  லைக்கும்,50 ஆயிரத்திற்கும்  மேலான கமெண்ட்களும், 4.5 லட்சத்திற்கும் மேலான ஃபாலோவர்ஸ்களையும் பெற்றிருப்பது அனைவரும் பிரமிக்கச்செய்கிறது.

தற்போது நடிகர் விஜயின்  ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே லியோ படத்திற்கான அப்டேட்டை மட்டுமே எதிர்பார்த்து வந்தனர்.  இந்நிலையில்   விஜய் இன்ட்ஸ்டாவிற்கு வந்தது   ரசிகர்களை மகிழ்விப்பதற்கான ஒரு  அப்டேட்டாக   இருக்கலாம் என தெரிகிறது.  அதனோடு அரசியலில் நுழைவதற்கான காரணமாக கூட இருக்கலாம் என மக்கள் மத்தியில் தற்போது பேசப்படுகிறது.

இதையும் படிக்க:   விடுதலை படம் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்... மாணவி வளர்மதி மீது வழக்கு...