நாளை வெளியாகும் மாமனிதன் திரைப்படத்தை முன்னிட்டு - விஜய் சேதுபதியின் புதிய பட அப்டேட்!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் மாமனிதன் நாளை வெளியாக இருக்கும் நிலையில் மலையாள படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

நாளை வெளியாகும் மாமனிதன் திரைப்படத்தை முன்னிட்டு - விஜய் சேதுபதியின் புதிய பட அப்டேட்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இவர் நடித்திருக்கும் மாமனிதன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதன் அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது. 

இந்த மலையாள திரைப்படத்துக்கு  “19 (1) (a)” என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் நடிகை நித்தியா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்திருக்கும் இப்படத்துக்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்துள்ளார். 

கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக கூறப்படும் இத்திரைப்படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இத்திரைப்படமானது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.