“35 ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாகும் பேசும் படம்” - விஜய்சேதுபதி , அரவிந்த் சாமி நடிப்பதாக தகவல்!

கமல்ஹாசனின் பேசும் படத்தை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பின் உருவாக இருக்கும் மற்றொரு பேசும் படம்!

“35 ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாகும் பேசும் படம்” - விஜய்சேதுபதி , அரவிந்த் சாமி நடிப்பதாக தகவல்!

உலகநாயகன் கமலஹாசன் கடந்த 1987 ஆம் ஆண்டு பொழுதில் பேசும் படம் என்ற வசனமே இல்லா திரைப்படத்தில் நடித்து இருந்தார், அதனையொட்டி தற்போது 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்றொரு திரைப்படத்தை உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

விஜய் சேதுபதி அரவிந்த் சாமி, மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகிய மூவரும் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த இருந்த நிலையில் இவர்கள் மூவர் சேர்ந்து தற்போது காந்தி டாக்ஸ் என்ற படத்தில் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். மராத்திய இயக்குனரான கிஷோர் பாண்டுரங் பெலகர் என்பவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்பத்திற்கு வசனமே இல்லை என்பது தான் புதிய முயற்சி என சொல்லப்படுகிறது. 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் அமலா நடிப்பில் உருவான பேசும் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் காந்தி டாக்ஸ் படமும் அதே போல ஒரு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீரியஸான சமூக பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கேலியும் கிண்டலுமாக உருவாக்கப்பட இருக்கும் இத்திரைப்படத்தினை ஜீ ஸ்டுடொயோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.