கமல்ஹாசனை தொடர்ந்து விஜய்சேதுபதி...நெகிழ்ந்து போன ரசிகர்கள்

புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் அழைத்து நம்பிக்கை கொடுத்த விஜய்சேதுபதி

கமல்ஹாசனை தொடர்ந்து விஜய்சேதுபதி...நெகிழ்ந்து போன ரசிகர்கள்

நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்திக்க வேண்டும் என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்  ஒருவன் தன்னை நேரில் கான விரும்புவதை ரசிகர்கள் மூலம் கேள்விப்பட்ட விஜய்சேதுபதி, அந்த சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து,அவனுக்கு நம்பிக்கை அளிக்கும்  விதமாகவும்,  கட்டியணைத்து பேசியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கனடாவில் வசிக்கும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தீவிர ரசிகரின் விருப்பத்தை கேள்விப்பட்டு அவருடன் வீடியோ காலில் பேசினார் கமல்.

இந்நிலையில் கமல்ஹாசன் வழியை பின்பற்றி விஜய் சேதுபதியும் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது