பக்கா காதல் கதையாம்..! ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!

விஜய் தேவர்கொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பக்கா காதல் கதையாம்..! ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவர்கொண்டா மற்றும் தென்னிந்திய சினிமாவில் மின்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா நடிப்பிலும் உருவான புதிய படம்  'குஷி'. இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கும் இந்தப்படத்தை நவீன் எர்னானி , ரவிசங்கர் யெலமஞ்சிலி ஆகியோர் தயாரிக்கிறார்கள். மேலும் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அத்துடன் 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த போஸ்டரில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவும், நடிகை சமந்தாவும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் தோற்றமளிக்கின்றனர்.  அதுமட்டுமில்லாமல் இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆக மொத்தம் 'குஷி'  திரைப்படம் உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதை, இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  உறுதிபடுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. 

இதனையடுத்து தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகிறது.

தயாரிப்பாளர்கள் : நவீன் எர்னானி , ரவிசங்கர் யெலமஞ்சிலி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஷிவா நிர்வாணா