சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!!

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி , சத்யராஜ் மற்றும் பாரதிராஜா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!!

வெண்ணிலா கபடிக்குழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை இயக்கிய சுசீந்திரன் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு வள்ளி மயில் என பெயரிட்டு, அதில் விஜய் ஆண்டனி மற்றும் சத்யராஜ், பாரத்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ஜதி ரத்னலு என்ற தெலுங்கு படத்தில் நடித்ட பரியா அப்துலா வள்ளி மயிலாக நடிக்க இருக்கிறார். புஷ்பா புகழ் சுனில் தம்பி ராமய்யா சிங்கம் புலி ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருக்கிறார்.  

இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கே.சக்கரவர்த்தி கவனிக்க படத்தொகுப்பினை ஆண்டனி மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது. படத்தின் கதையானது 1980 களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது, மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகியும் வருகிறதாம். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.