விஜய் 66 படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே இணையபோவதாக தகவல்..! யாரெல்லாம் தெரியுமா?

விஜய்66 படம் குறித்து வரிசையாக வெளியாகும் அறிவிப்புகள்..!

விஜய் 66 படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே இணையபோவதாக தகவல்..! யாரெல்லாம் தெரியுமா?

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள விஜய் 66 படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர்கள் பட்டியலை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, ஷாம்,  பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வெளியான அறிவிப்பில்,  யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் நடிகை சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.