சபரிமலையில் பொங்கல் கொண்டாடிய விக்னேஷ் சிவன்; ‘என்ன தலைவா, சிங்கிளா வந்திருக்கிங்க, தலைவி எங்க..?’ கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

சபரிமலையில் தனியாக  பொங்கல் கொண்டாடிய விக்னேஷ் சிவன்...

சபரிமலையில் பொங்கல் கொண்டாடிய விக்னேஷ் சிவன்; ‘என்ன தலைவா, சிங்கிளா வந்திருக்கிங்க, தலைவி எங்க..?’ கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒவ்வொரு பண்டிகையையும் தனது காதலியும் நடிகையுமான நயன்தாராவுடன் கொண்டாடுவதையே வழக்கமாக கொண்டு உள்ளார். அதுவும் குறிப்பாக சமீபத்தில் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை துபாயில் நயன்தாராவுடன் கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் வைரலாகி பேசப்பட்டது.

இந்நிலையில் பொங்கல் திருநாளையும் தனது காதலி நயன்தாராவுடன் இணைந்து கொண்டாடுவார்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் சபரிமலையில் தனியாக  பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.  

அதில் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும், சபரிமலையில் செய்யும் பிரார்த்தனை மற்றும் நல்ல நினைவுகள் அனைவருக்கும் சந்தோஷத்தை தரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்திற்கு ஒரு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது.

மேலும், அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் ‘என்ன தலைவா, சிங்கிளா வந்திருக்கிங்க’ என்று கமெண்ட்ஸ் செய்துள்ளார்.