நயன் - விக்னேஷ் சிவன் திருமண அறிவிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான உறவினர்..? பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி!!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக விக்னேஷ் சிவனின் உறவினர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன் - விக்னேஷ் சிவன் திருமண அறிவிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான உறவினர்..? பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு எப்போது திருமணம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் இருந்த நிலையில், சமீபத்தில் நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தால், தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக விக்னேஷ் சிவனின் பெரியப்பாவான மாணிக்கம் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொந்த ஊரான லால்குடியில், சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி தம்பதிக்கு பிறந்தவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா. அப்போது விக்னேஷ் சிவனின் பெரியப்பாவான எனக்கு (மாணிக்கம்) குழந்தை இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் தங்களுடைய சொந்த குழந்தை போல வளர்த்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் பணி நிமித்தம் காரணமாக விக்னேஷ் சிவனின் தாய் தந்தை கடந்த 1970களிலேயே சென்னை வந்துவிட்டனர். அதன்பின்பு விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் தங்களது (மாணிக்கம்) குடும்பத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என கூறிய அவர், விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கு கூட தன்னை அழைக்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்யப் போகும் நிலையில் இதுவரை எங்களுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை என்பது மன உளைச்சலாக இருப்பதாக மாணிக்கம் வருத்தத்துடன் பேட்டியில் கூறியுள்ளார். இருப்பினும் விக்னேஷ் சிவன் எங்களது மகன் என்பதால் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.