விக்னேஷ் சிவன் (ம) நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் முழுவதும் இணையத்தில் வைரல்..!

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் (ம) நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் முழுவதும் இணையத்தில் வைரல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடனும் வலம் வரும் நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். நீங்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஜீன் 9 ஆம் தேதி என்று தங்கள் திருமண தேதியை அறிவித்தனர். அதன்படி 6 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9 ஆம் தேதியான் இன்று திருமணம் என்னும் பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களது திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று கோலாகலமாக நடந்தேறியுள்ளது. இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் மங்கள நாண் அணிவித்து தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். 

இந்நிலையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விசேஷ கண்ணாடி மாளிகையில் அரங்கு அமைக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற விக்கி - நயன் திருமணப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. முதலில் நயன்தாரா நெற்றியில் விக்னேஷ் சிவன் முத்தமிடுவது போன்று புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மாலை மாற்றுவது போன்றும்,

தாலி கட்டுவது போன்றும்,

புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் நயன் - விக்கி இருவரும் தனி தனியே நடப்பது போன்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

விக்கி - நயன் இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இந்த புகைப்படம் ஒரு விருந்தாக அமையும். தற்போது சமூக வலைதளம் முழுவதும் இவர்களின் திருமண புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.