கூட்ட நெரிசலில் மறந்து விட்டேன்.. மன்னிப்புக் கடிதம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காலணி அணிந்து சென்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மன்னிப்புக் கடிதத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

கூட்ட நெரிசலில் மறந்து விட்டேன்..  மன்னிப்புக் கடிதம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்!!

புதுமணத் தம்பதிகளான விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, திருப்பதி கோயிலுக்கு சென்றபோது காலணி அணிந்திருந்த புகைப்படங்கள் வைரலானது. தொடர்ந்து இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஃபோட்டோஷுட்டை முடிக்கும் தருவாயில் அதிகம் பேர் கூடியதால், காலணி அணியாத பகுதியை கவனிக்கத் தவறி விட்டதாக விக்னேஷ் சிவன் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், மணம் முடித்த கையோடு வீட்டுக்குக் கூட செல்லாமல் திருப்பதி கோயிலுக்கு வந்தபோது தவறு நடந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். திருமணம் செய்யவிருந்த ஒரு மாதத்துக்கு முன் பலமுறை கோவிலுக்கு வந்ததாகவும், பல்வேறு காரணங்களால் திருப்பதியில் மணம் முடிக்க முடியாத சூழல் உருவானதையும் அவர் நினைவு கூர்ந்திருந்தார்.