அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா அனிருத்!! இணையத்தில் செம வைரல்

அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா அனிருத்!! இணையத்தில் செம வைரல்
Published on
Updated on
2 min read

விஜயின் ’அரபிக் குத்து’ பாடலுக்கு, நடிகை சமந்தா, அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். வரும் ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாகக் கூறப்படும் நிலையில், படக்குழு அதற்கான புரொமோஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, கடந்த 14ஆம் தேதி, இப்படத்திலிருந்து ’அரபிக்குத்து’ என்ற பாடலை வெளியிட்டிருந்தனர். அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த பாடல், யூடியூபில் ஒரே நாளில் இரண்டரை கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், நடிகை சமந்தா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து திரைப்பிரபலங்கள் அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வருவது இணையத்தில் படு வைரலாக வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com