நடிகர் சல்மான் கான் சாயலில் இருக்கும் நபர் நடுரோட்டில் வீடியோ பதிவு - கைது செய்த போலீசார்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் போலவே இருக்கும் நபர் நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் ரீல் வீடியோ பதிவு செய்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சல்மான் கான் சாயலில் இருக்கும் நபர் நடுரோட்டில் வீடியோ பதிவு - கைது செய்த போலீசார்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் போலவே தோற்றம் கொண்ட அசாம் அன்சாரி என்பவர் உத்தரபிரதேசத்தின் போக்குவரத்து நிறைந்த சாலையின் நடுவே வாகனங்களை மறித்தவாறு ரீல் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதனால் வாகன போக்குவரத்தில் இடைஞ்சல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.