போட்டோ ஷூட்டில் நிகழ்ந்த விபரீதம்...! பாறையில் வழுக்கி விழுந்த டிடியின் அக்கா..! வைரலாகும் வீடியோ

பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி போட்டோ சூட் எடுக்கும் போது பாறையில் வழுக்கி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டோ ஷூட்டில் நிகழ்ந்த விபரீதம்...! பாறையில் வழுக்கி விழுந்த டிடியின் அக்கா..! வைரலாகும் வீடியோ

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக விளங்குபவர் டிடி. காபி வித் டிடி என்ற பிரபல நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற ஒரு சகோதரி உள்ளார். அவரும் தொகுப்பாளினி ஆவார். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது கூட எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்துவருகிறார்.

இவருக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவ்வப்போது சூட்டிங் ஸ்பார்ட்டில் கூட சக நடிகைகளுடன் நடனம் ஆடி அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார். இந்த நிலையில் பிரியதர்ஷினி மகாபலிபுரம் கடற்கரையில் நடன பயிற்சியை மேற்கொண்டு அதை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாறைகள் மீது அவர் ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது கடல் அலைகள் மேலெழும்பி கொண்டிருந்தது. எனினும் அதை பொருட்படுத்தாமல் அலையில் நனைந்தபடியே ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பாறையில் உட்கார்ந்தபடியே ஒரு நடன அசைவை மேற்கொள்ளும் போது பெரிய அலை வந்ததால் அதில் வழுக்கி விழுந்தார். அதை சுதாரித்துக்கொண்ட பிரியதர்ஷினி உடனே எழுந்துக்கொண்டார்.

இது குறித்த வீடியோவை பிரியதர்ஷினி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.