“வீரன் தயாராகிறான்” ஹிப்ஹாப் ஆதி ட்விட்டர் பதிவு - என்னவா இருக்கும்??

மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் மற்றும் பல படங்களின் கதாநாயகனான ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த பட அப்டேட் வெளியாகி உள்ளது. 

“வீரன் தயாராகிறான்” ஹிப்ஹாப் ஆதி ட்விட்டர் பதிவு - என்னவா இருக்கும்??

பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மைகளை உடையவர் ஹிப்ஹாப் ஆதி. மேலும் இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி , இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

மேலும் நட்பே துணை, நான் சிரித்தால் , அன்பறிவு போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து ஆதி நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மரகத நாணயம் படத்தை இயக்க் இருந்த ஏ.ஆர்.கே சரவணன் இயக்கும் படத்தில் ஆதி நடிக்க உள்ளார்.

இப்படத்துக்கு வீரன் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான சிவக்குமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கியதன் மூலம் அதனை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்க இணை தயாரிப்பினை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் செய்திருக்கின்றனர். மேலும் முனிஷ்காந்த், காளி, வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  நடிக்கிறார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவை தீபக் டி மேனன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று எளிமையான முறையில் பொள்ளாச்சியில் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.