
சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில், இன்றைய காலத்து காதல் கதைகளை மிக அழகாக தெளிவுப்படுத்தி இருப்பார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவருக்கு யார் அடுத்ததாக போட்டி என்ற கேள்வி அனைவருக்கும் வந்த நிலையில், தற்போது ஜீவா, தனது படத்தின் மூலம் வெளிவந்து நிற்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மிகவும் வித்தியாசமான வெவ்வேறு காதல்களை காட்டும் ‘வரலாறு முக்கியம்’ படமானது ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில், காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாகவும், சரண்யா பொன்வண்ணன், கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், பிரக்யா நக்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
மிகவும் வித்தியாசமான இந்த டிரைலர் வெளியாகிய சிறிது நேரத்திலேயே படு பயங்கரமான வரவேற்புப் பெற்றதோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. முழு காமெடி கதையாக தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
மேலும் படிக்க | இரண்டாம் முறையாக நடக்க பழகும் பூஜா ஹெக்டே...