நம்ம ஐஸ்ஸா இது..! மெழுகு சிலை போல இருக்காறே..! குடும்பத்துடன் ஐஸ்ஸை சந்தித்த வரலட்சுமி..!

குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்..!

நம்ம ஐஸ்ஸா இது..! மெழுகு சிலை போல இருக்காறே..!  குடும்பத்துடன் ஐஸ்ஸை சந்தித்த வரலட்சுமி..!

பொன்னியின் செல்வன் படத்திற்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ள ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரை வரலட்சுமி சரத்குமார் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. 

ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில், சரத்குமாரின் மகள்களான வரலட்சுமி, பூஜா இருவரும் படப்பிடிப்பிற்கு சென்று அங்கு ஐஸ்வர்யா ராய், அபிஷேக், அவர்களது மகள் ஆராதியாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனை வரலட்சுமி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்களில் இணையங்களில் வைரலாகி வருகிறது.