விஜய்யின் ”தளபதி 66” படத்தில் இணையும் இன்னொரு கதாநாயகி? யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

வம்சி இயக்கும் தளபதி 66 திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் ”தளபதி 66” படத்தில் இணையும் இன்னொரு கதாநாயகி? யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த மாதம் ”பீஸ்ட்” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து தற்போது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், தில்ராஜீ தயாரிப்பில் உருவாகி வரும் “தளபதி 66” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தளபதி 66 திரைப்படம் நடிகர் விஜய், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, சகோதரர்களாக ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த், தந்தையாக சரத்குமார், பிரபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களோடு உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலம் தளபதி 66-ல் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு கதாநாயகி இணையவிருப்பதால் அந்த நடிகை யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் இரண்டாவது கதாநாயகி தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை என்று தகவல் கூறுகின்றது.