30 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'வாத்தி' டிரைலர்...

30 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'வாத்தி' டிரைலர்...

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி படத்தின் டிரைலர் யூடியூபில் 30லட்சம் பார்வையாளர்களை கடந்து டிரண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வரும் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த 8-ம் தேதி மாலை வெளியான இப்படத்தின் டிரைலரை இதுவரை யூடியூபில் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக யூடியூபில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது வாத்தி பட டிரைலர்.

மேலும் படிக்க | குழந்தை நட்சத்திரம் இப்போ ஹீரோயினா?