இதுவரை இல்லாத வசூல் சாதனை ?...வலிமை வசூல் குறித்து போனிகபூர் பேட்டி.!!

இதுவரை இல்லாத வசூல் சாதனை ?...வலிமை வசூல் குறித்து போனிகபூர் பேட்டி.!!

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் தான் வலிமை. இந்த திரைப்படம் வசூல் வேட்டையுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணாத்த, மாஸ்டர் உள்ளிட்ட பல முந்தையை படங்களில் வசூல் சாதனையை தமிழ்நாடு அளவில் முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது வலிமை.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் இந்த படம் 36.17 கோடி ரூபாய் வசூலானதாக தகவல் வெளியானது.  இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் அளித்துள்ள பேட்டியில், வலிமை வசூல் குறித்து முழுமையான தகவல் இன்னும் வந்து சேரவில்லை, ஆனால் இதுவரை வந்த படங்களை விட இந்த படத்தின் வசூல் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் மூலம் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.