தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான, நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.
நடிகர் விக்ரம்:
நடிகர் விக்ரம், திரைத்துறையில் கால் பதித்து, பல படங்களில் நடித்து வெற்றி கண்டு, தனக்கென்று பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தனது திரைப்பயணத்தில் 32 ஆண்டுகளை கடந்துள்ள விக்ரம், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து கலக்கி இருந்தார்.
யூஏஇ வழங்கும் கோல்டன் விசா :
ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலிவுட் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி சிறப்பித்து வருகிறது.
கோல்டன் விசா என்றால் என்ன ?
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்ககூடிய அல்லது சிறந்த திறன் கொண்ட நபர்களுக்கு இந்த கோல்டன் விசாவை வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அமீரகம் வழங்கக்கூடிய இந்த விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள், அந்த நட்டின் குடிமக்கள் போலவே பணிபுரியலாம். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு பிறகு தானாகவே புதுப்பிக்கக்கூடிய வகையில் வழங்கப்படுவது தான் இந்த கோல்டன் விசா.
கோல்டன் விசா பெற்ற கோலிவுட் பிரபலங்கள் :
நடிகர்கள் திரிஷா, ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், நக்மா, ராதா, பார்த்திபன், கமல், விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, மீனா, சிம்பு, நாசர் போன்ற பல பிரபலங்கள் இந்த விசா பெற்றுள்ளனர்.
விக்ரமுக்கு கோல்டன் விசா :
பல கோலிவுட் பிரபலங்களை தொடர்ந்து தற்போது அந்த வரிசையில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார் . ஐக்கிய அரபு அமீரகம் சார்பில், துபாய் சென்ற நடிகர் விக்ரமுக்கு மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்த கோல்டன் விசாவை நடிகை பூர்ணாவும் , அவரது கணவரும் தொழிலதிபருமான ஷானித்தும் வழங்கியுள்ளனர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-- சுஜிதா ஜோதி
இதையும் படிக்க : இரண்டாவது கணவரை அடித்து கொலை செய்த முதல் கணவர்..!