டும்..டும்..டும்..முடிந்தது! - நடிகை நிக்கியை கரம் பிடித்தார் ஆதி!!

தமிழ் சினிமாவின் திரைபிரபலமான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவரின் திருமணம் சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. 

டும்..டும்..டும்..முடிந்தது! - நடிகை நிக்கியை கரம் பிடித்தார் ஆதி!!

தமிழில் டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார்.

நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. அதன் இடையே ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளிலும் நிக்கி பங்கேற்று வந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது. 

நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் இருவருக்கும் நிச்சயம் முடிந்த புகைப்படங்கள் வெளியாகி வந்தது.

இருவரும் விரைவில் திருமணம் செய்ய தேதியும் முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர்கள் திருமண நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகியோரும் மற்ற திரைப்பிலங்களும் கலந்து கொண்டு ஆதியையும் நிக்கியையும் வாழ்த்தி உள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.