நடிகர் சூர்யாவோட நேரடியா போட்டியிடும் டொவினோ தாமஸ்.. ஓ ஜெய்பீம் படத்துக்கு போட்டி மின்னல் முரளியா?

மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்தோடு போட்டியிடுகிறது மின்னல் முரளி..!

நடிகர் சூர்யாவோட நேரடியா போட்டியிடும் டொவினோ தாமஸ்.. ஓ ஜெய்பீம் படத்துக்கு போட்டி மின்னல் முரளியா?

மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் படத்தோடு நேருக்கு நேர் மோதவுள்ளது மின்னல் முரளி திரைப்படம். 

ஜெய்பீம்: கடந்தாண்டு இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. தஜெ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன் உட்பட பலர் நடித்திருந்தனர். 1993-ம் ஆண்டு குறவர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் லாக் அப் டெத் நிகழ்வை தழுவி எடுக்கப்பட்டது ஜெய்பீம். 

சர்ச்சை: படம் வெளியான 8-வது நாளில் வெடித்தது சர்ச்சை. அதாவது படத்தில் வில்லனாக தோன்றும் நபரின் பெயர் மற்றும் அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் தங்கள் அமைப்பின் சின்னம் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல் பலரும் படத்திற்கு எதிராக கருத்துகளை கூற ஆரம்பித்தனர். இந்த சர்ச்சை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடும் அளவிற்கு சென்றது. 

விருதுகளை குவித்த ஜெய்பீம்: என்னதான் ஒரு புறம் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பினாலும் கூட, மறுபுறம் விருதுகளை குவிக்க தவரவில்லை ஜெய்பீம். சர்வதேச அளவில் கோல்டன் விருதுகள் முதல் ஆஸ்கர் வரை படம் சென்றது. ஆனால் விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் படம் இடம்பெற்றது. ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்றாலும் கூட பெய்ஜிங்கில் நடைபெற்ற 12-வது சர்வதேச விழாவில் 'டியாண்டன்' என்ற விருதை பெற்றது ஜெய்பீம். 

மெல்போர்ன் சர்வதேச திரைப்படவிழா: இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இம்மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் பல படங்கள் போட்டியிடவுள்ளன. 

3 பிரிவுகளில் போட்டியிடும் ஜெய்பீம்: இந்த விழாவில், 'சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை' ஆகிய பிரிவுகளின் கீழ் களமிறங்குகிறது 'ஜெய்பீம்' திரைப்படம். சிறந்த நடிகர் போட்டியில் சூர்யாவும், சிறந்த நடிகை போட்டியில் லிஜிமோல் ஜோஸ்ஸும் ரேஸில் உள்ளனர். 

ஜெய்பீம் vs மின்னல் முரளி: இந்த நிலையில், ஜெய்பீம் படத்திற்கு போட்டியாக மலையாளத்தில் வெளியான 'மின்னல் முரளி' திரைப்படமும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த படத்திற்கான பிரிவிலும், சிறந்த நடிகருக்கான பிரிவிலும் ஜெய்பீமோடு மோதவுள்ளது மின்னல் முரளி. அதன்படி சூர்யாவுக்கு போட்டியாக மின்னல் முரளி கதாநாயகர் டொவினோ தாமஸ் களமிறங்குகிறார். 

மின்னல் முரளி: கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான பெஸ்ட் எண்டர்டெயிண்ட்மெண்ட் திரைப்படம் 'மின்னல் முரளி'. டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்டதாக வெளியானது. தென்னிந்திய மொழிகளில் ஒரு சூப்பர் ஹீரோ கதை என்பது சற்று வித்தியாசமானது. அப்படி ஒரே திரைப்படத்தில் ஒரே மாதிரியான சக்தி கொண்ட நல்ல சூப்பர் ஹீரோவும், கெட்ட சூப்பர் ஹீரோவும் ஒரு கட்டத்தில் நேருக்கு நேர் மோதுவதாக கதைக் களத்தை கொண்டிருந்தது மின்னல் முரளி திரைப்படம்.