உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

 உலகில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களில் யோகி பாபு நடித்த மண்டேலா படமும், தனுஷ் நடித்த கர்ணன் படமும் இடம்பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது.

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

2021 ஜுன் 30 வரையான அரையாண்டில் உலகில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலை Letterboxd இணையதளம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, உலகளாவிய பட்டியலான இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மூன்று திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்தவை. இரண்டு தமிழில் வெளிவந்தவை. அதில், பத்தாவது இடத்தில் கர்ணன் படம் உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய இத்திரைப்படம் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும், அவர்கள் திருப்பி அடிப்பதையும் சொல்லியது. திரையரங்கில் வசூலை அள்ளிய இத்திரைப்படம் ஓடிடியிலும் அதிக பார்வையாளர்களை பெற்றது.

இதேபோன்று மண்டேலா திரைப்படம் இந்தப் பட்டியலில் 17 வது இடத்தில் உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த இந்தப்படம் ஒரு சாமானியனின் வாக்குக்குக்கு இருக்கும் வலிமையை அரசியல் கதையுடன் வெளிப்படுத்தியுள்ளது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.