நாளை 12 ஆவது காய்கறி கண்காட்சி...!

நாளை 12 ஆவது காய்கறி கண்காட்சி...!

கோடை சீசனில் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் நாளை 12வது காய்கறி கண்காட்சிக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மலை மாவட்டமான நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ளது. இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கவும் இயற்கையின் அழகை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இதில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் நாளை 12 வது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், காய்கறி கண்காட்சிக்காக பூங்காவில் தயார் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் காய்கறிகள் வைப்பதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 5 டன் காய்கறிகளினால் பல்வேறு வடிவிலான உருவங்கள் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஊட்டி 200, டிராகன் போன்ற உருவங்கள் செய்யபடவுள்ளன. சிம்பான்சி குரங்கு, சிறுத்தை போன்ற உருவங்களும் செய்து வைக்கபட்டுள்ளன. இது தவிர பூங்காவில் ஒரு லட்சம் மலர் செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன.

இதையும் படிக்க:தனித்துவத்தை இழக்கிறதா சென்னை மாநகராட்சி...??