த்ரோபேக் கிளாமர் !!! பிக்பாஸ் அபிராமி கிளாமர் புகைப்படங்கள்...

த்ரோபேக் கிளாமர் !!! பிக்பாஸ் அபிராமி கிளாமர் புகைப்படங்கள்...

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு சினிமா வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அபிராமிக்கு மற்ற போட்டியாளர்களை போல் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அஜித்துடன் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீஸாகி நல்ல வெற்றிப்பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்தததே, எனினும்  அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அபிராமி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்  கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.  இவர் தற்போது  த்ரோபேக் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்களுக்கு பின்னணியாக அவர் ’மின்னலே’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘வசீகரா’ என்ற பாடலின் பின்னணி இசையை பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.