ஷாருக் கான் - அட்லீ படத்தின் கதை இது தானா! கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஷாருக் கான் - அட்லீ படத்தின் கதை இது தானா என இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஷாருக் கான் - அட்லீ படத்தின் கதை இது தானா! கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநர் பட்டியலில் அட்லீ ஒருவர். இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.

அட்லீ அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.  

இந்நிலையில் இப்படத்தில் ஷாருக் கான் இந்திய உளவுத்துறை அதிகாரியாகவும், விதிகளை மீறும் நபராகவும் என டபுள் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையறிந்த நெட்டிசன்கள் தற்போது அட்லீ அங்கு சென்று விஜயகாந்தின் பேரரசு படத்தை இயக்கவுள்ளார் என மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.