மாநாடு படத்தின் 3 நாள் வசூல் இவ்வளவா?... ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சுரேஷ் காமாட்சி! குஷியில் ரசிகர்கள்!  

மாநாடு படத்தின் 3 நாள் வசூல் இவ்வளவா?... ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சுரேஷ் காமாட்சி! குஷியில் ரசிகர்கள்!  

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரபூர்வமாக  பாக்ஸ் ஆபீஸ் கலக்க்ஷனை தெரிவித்து சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.  
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் கடந்த நவம்பர் 25 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கும், யுவனின் இசைக்கும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

டைம் லூப் கான்சேப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

கொட்டும் மழையிலும் ரசிகர்கள் சாரை சாரையாக படம் பார்க்க சென்றனர். ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். 
மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு புதிய திருப்புமுனையாக இருக்கும் என்றே எதிர் பார்க்கப்பட்ட  நிலையில், அதனை பூர்த்தி செய்யும் விதமாக இப்படம் அமைந்துள்ளது, மாநாடு திரைப்படம். படம் வெளியானதும் தனக்கு ஆதரவு அளித்த நடிகர் சூர்யா,சிவகார்த்திகேயன் ஆகிய பிரபலங்களுக்கும் , தனக்கு பக்கபலமாக இருந்த தனது ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் முதல் நாள் முடிவில் மட்டும் மாநாடு படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் மாநாடு திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.10 கோடி மட்டும் நான் வசூல் செய்திருப்பதாக  எதிர்மறையாகப் பேசி வந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், மூன்று நாட்களில் மாநாடு திரைப்படம் ரூ.20 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார் இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உறைந்து போயுள்ளனர்.

சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியான 2 நாட்களில் ரூ.14 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக, சுரேஷ் காமாட்சி டிவீட் செய்திருந்த நிலையில், மூன்றாவது நாளில், மாநாடு திரைப்படம் ரூ.20 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாரத்தில் மொத்தம் 30 கோடி ரூபாய் வசூலை மாநாடு தாண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com