”சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்கார நண்பர்”.. கமல்ஹாசனின் ட்வீட்டால் மகிழ்ச்சியடைந்த பாரதிராஜா ரசிகர்கள்..!

இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா வீடு திரும்பியுள்ளார்..!

”சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்கார நண்பர்”.. கமல்ஹாசனின் ட்வீட்டால் மகிழ்ச்சியடைந்த பாரதிராஜா ரசிகர்கள்..!

இயக்குநர் பாரதிராஜா பூரண குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இமயம்:

இயக்குநர் இமயம் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா, சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் கடந்த மாதம் 21-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் என்னைக் காண யாரும் வர வேண்டாம் என அறிக்கை வாயிலாக அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

முதலமைச்சர் சந்திப்பு:

அதன் பிறகு சிகிச்சை முடிந்து கடந்த 9-ம் தேதி வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஓய்வில் இருந்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர் வைரமுத்து ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர். அப்போது வெளியான புகைப்படத்தில் கூட, தனக்கே உரித்தான ஸ்டைலில் கட்டலில் அமர்ந்தவாறு முதலமைச்சருடன் பேசியிருந்தார் பாரதிராஜா. 

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:

வீட்டில் ஓய்வில் இருந்தவருக்கு சில நாட்களிலேயே சிறுநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், ”நலம் பெற்று வீடு திரும்பிய பாராதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைப்பேசியில் பகிர்ந்து கொண்டதாக” தெரிவித்துள்ளார். 

தேனிக்கார நண்பருக்கு வாழ்த்துகள்:

அத்தோடு "சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.