தேசியக் கொடியை ஸ்பெயின் முழுவதும் பறக்க விட்ட கோலிவுட்டின் இளம் ஜோடி..!
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்களின் கொண்டாட்டம்..!

விக்கி நயன்: கோலிவுட் வட்டாரத்தில் இளம் ஜோடிகளாக வலம் வருபவர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருக்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட்: சென்னையில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிகழ்ச்சிகள் மற்றும் ப்ரோமோஷன் வேலைகளில் தனது பணியினை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் பாடல், தொடக்க நிகழ்ச்சியில் தமிழர் வரலாற்றை கூறிய விதம் என இவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஜவான் படப்பிடிப்பில் நயன்: தமிழ்நாட்டில் விக்னேஷ் பிசியாக இருந்த நேரத்தில், நயன்தாரா தன்னுடைய பங்கிற்கு வட மாநிலத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் எப்போது தான் அவர்களுக்கான நேரத்தை செலவிடுவார்களோ? என ரசிகர்களே கேட்கும் அளவுக்கு இருவரும் திருமணமான 10 நாட்களில் இருந்தே தங்களது தனிப்பட்ட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.
ஸ்பெயினில் சுதந்திர கொண்டாட்டம்: இந்த நிலையில் விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி நயனுடன் சுதந்திர தினத்தை எப்படி கொண்டாடினோம் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள இருவரும், நமது இந்திய நாட்டின் தேசியக் கொடியை பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று பெருமையுடன் பறக்கவிட்டபடி போஸ் கொடுத்துள்ளனர். அத்தோடு இருவரும் கொடியை பிடித்தவாரு ”வந்தே மாதரம்” என்ற பாடல் ஒலிக்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram