நயன்தாரா பாடலுக்கு சேலையில் உச்சகட்ட கிளாமர் போஸ்களை காட்டிய யாஷிகா..! இணையத்தில் வைரலான வீடியோ

நயன்தாரா பாடலுக்கு சேலையில் உச்சகட்ட கிளாமர் போஸ்களை காட்டிய யாஷிகா..! இணையத்தில் வைரலான வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பாடல் ஒன்றுக்கு  நடிகை யாஷிகா சேலையில் உச்சகட்ட கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

சமீபத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். பின் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தொடர்ந்து  போட்டோஷூட்களை ஆரம்பித்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடை அணிந்து  நயன்தாராவின் பாடலுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள  ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’நான் பிழை’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அனிருத் இசையில் உருவான இந்த மெலடி பாடலுக்கு நடிகை யாஷிகா கருப்பு காஸ்ட்யூமில் உச்சகட்ட கிளாமருடன் கூடிய போஸ்களை கொடுத்துள்ளார். இந்த வீடியோவை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில்,  ஏராளமான லைக்ஸ்களை பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Y A S H


நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது.

இந்நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில்  தம்பதியிருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கில் அறிமுகமாகும் மகளின் படத்தை இயக்கும் பிரபல நடிகர்..!

பிரபல நடிகர் ஒருவர், தனது மகள் அறிமுகமாக உள்ள தெலுங்கு திரைப்படத்தை, அவரே இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாகவே நடித்துவருபவர் நடிகர் அர்ஜீன். ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படும் இவர், நடிகர் மட்டுமின்றி ஒரு சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பெரும்பாலும் சண்டை காட்சிகளை கொண்டே இருப்பதால் “ஆக்‌ஷன் கிங்”  என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். முதலில் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போதெல்லாம் வில்லனாக திரையில் தோன்றி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

இதனிடையே இவரது மகளும் வாரிசு நடிகையாக திரையில் களமிறங்கினார். நடிகர் அர்ஜீனின் மகள் ஐஸ்வர்யா கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “பட்டத்து யானை” திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததை அடுத்து ஐஸ்வர்யாவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜீன் தனது மகளை தெலுங்கில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் மகள் நடிக்கும் படத்தை அவரே இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் நடிக்க உள்ள நிலையில், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அதேபோன்று இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.   

மகன் என்று வழக்கு பதிந்த தம்பதியிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட நடிகர் தனுஷ்..! நோட்டீஸால் பரபரப்பு!

கதிரேசன் - மீனாட்சி தம்பதியிடம் நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அத்துடன் விடாமல் ஊடகங்களிலும் ஒரு சில போட்டோக்களை காட்டி தனுஷ் எங்களுடைய  மகன் தான் என்று கூறி பேட்டி அளித்தனர்.

இதனிடையே மதுரை உயர்நீதிமன்றக்கிளை இந்த வழக்கை ரத்து செய்துவிட்டது. அதற்குபிறகும் அவர்கள் தனுஷ் தங்களை கொலை செய்ய முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவை பெற்று விட்டதாகவும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுசுக்கும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் தம்பதியினரின் நோட்டீஸை அடுத்து, கதிரேசன் - மீனாட்சி அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்று தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது இந்த நோட்டீசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அட்லீ மற்றும் எச்.வினோத் குறித்த மீம்ஸ்க்கு நடிகர் மனோபாலா கூறிய கருத்து என்ன தெரியுமா?

விஜய் மற்றும் அஜித் படங்களை அட்லீயும், எச்.வினோத்தும் இயக்காமல் இருந்தால் எப்படி வரவேற்பு  இருந்திருக்கும் என்பது குறித்த மீம்ஸ்க்கு நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் அட்லீ மற்றும் எச்.வினோத். அட்லீ இயக்கத்தில் முதல்படமாக வெளியான ராஜா ராணி திரைப்படம் செம்ம ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து தளபதி விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என அவருடைய மூன்று படங்களையும் வரிசையாக அட்லீ இயக்கியிருந்தார்.

இதேபோன்று தான் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக ’ஏகே 61’ படத்தையும்  இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கிவருகிறார். இப்படி விஜய் படங்களை இயக்கியதால் அட்லி மீது அஜித் ரசிகர்களும், அஜித் படங்களை இயக்கியதால் எச்.வினோத் மீது விஜய் ரசிகர்களும் தங்களது கடுமையான வெறுப்பினை மீம்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் வெளிபடுத்தி வருகின்றனர்.

 

அதில் ஒரு மீம்ஸ் கடந்த சில தினங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் வைரலாகும் இந்த மீம்ஸ்க்கு பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா “உண்மை’ என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்தார். தொடர்ந்து மறைந்த பிரபல ஓவியர் உபால்டின் மகள் எமலி உபால்டை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இமானின் 2வது திருமணம் குறித்து  கருத்து தெரிவித்த அவரது முன்னாள் மனைவி, 12 வருடங்களாக உங்களுக்காகவே வாழ்ந்த ஒருவரின் இடத்தை எளிதாக வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டீர்கள், உங்களுக்காக வாழ்ந்த நான் ஒரு முட்டாள் என கூறி இருந்தார்.

 

இதைத்தொடர்ந்து, இமான் தனது திருமணத்தை அறிவித்ததை போன்றே ஒரு அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அதில் கடந்த சில ஆண்டுகளாக நானும் என் குடும்பத்தினரும் பட்ட வேதனைக்கு இந்த செல்லப்பிராணிகள்தான் மருந்து, இவை கடவுள் எனக்கு கொடுத்த வரம் என கூறி புதிதாக வீட்டிற்கு வந்துள்ள நாய்களை வரவேற்றுள்ளார். இந்த டிவீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.