ஐஸ்வர்யாவை ஏமாற்றுவது ரொம்ப கஷ்டமாம்...ஏன் தெரியுமா? தனுஷ் சொன்ன பதில் இதோ..

ஐஸ்வர்யா தனுஷ் பிரிவிற்கு பிறகு  ஐஸ்வர்யா குறித்து தனுஷ் பேசியுள்ள காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யாவை ஏமாற்றுவது ரொம்ப கஷ்டமாம்...ஏன் தெரியுமா? தனுஷ் சொன்ன பதில் இதோ..

நடிப்பில் பல அவதாத்தை காட்டி தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன் திரை பயணத்தை பிரபலமாக கொண்டு செல்கிறார். இப்படி முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையே அதிர்ச்சியடைய செய்தது.

இதனைதொடர்ந்து இருவரும் மீண்டும் இணைவார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில், ஐஸ்வர்யா குறித்து தனுஷ் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் தனது இரு மகன்களும் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருந்தாலும் யாத்ரா தான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார். ஆனால் லிங்கா அம்மா ஐஸ்வர்யாவை போன்றவர், அவ்வளவு எளிதில் ஏமாத்த முடியாது. ஐஸ்வர்யா நல்லா படிச்சவங்க, எதுவாயிருந்தாலும் யோசிச்சு செய்வாங்க அவ்வளவு சீக்கிரம் அவங்களை ஏமாத்த முடியாது என ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசிய தனுஷ் வீடியோ தற்பொழுது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.