ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரே மேன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரே மேன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அவெஞ்சஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் போன்ற படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்களான ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

ஆயிரத்து 500 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் ஜுலை 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை காண ஹாலிவுட் பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.