கண்மணியா... கதிஜாவா...வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டீசர்!!

கண்மணியா... கதிஜாவா...வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டீசர்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக விளங்கும் விஜய்சேதுபதி, நயந்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே  மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வந்தது.

டீசரின் முதலிலேயே விஜய்சேதுபதி சொல்ற வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது என்றே சொல்லலாம். முதன் முதலில் என்னைக்கு நீ என்கிட்ட உன் லவ்வ சொன்னியோ, அன்னையில் இருந்து தான் என் வாழ்க்கையே அழகாக மாறியது என்றும், நான் முதன்முதலில் கண்ண பாத்து பேசிய முதல் பெண் நீதான் என்றும், மைனஸ் ஆகவே போய்க்கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கை பிளஸ் ஆக மாறியது உன்னால் தான் எனவும், ஒரு காதலியிடம் கூறும் வசனங்களை இரண்டு காதலிகள் முன்பு ஒரே நேரத்தில் விஜய் சேதுபதி கூறுவது அசத்தலாக உள்ளது.

மேலும் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து இரண்டு பேரிடமும் ஒரே நேரத்தில் காதலை சொல்லும் கேரக்டரில் விஜய் சேதுபதி அசத்தியுள்ளார். அதேபோல் விஜய்சேதுபதி கூறுவதை மாறி மாறி பார்த்து குழப்பத்தில் இருக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் தங்களது நடிப்பில் அசத்தியுள்ளார்.

இடையே இடையே நடிகர் பிரபு மற்றும் நகைச்சுவை நடிகர் கிங்ஸ் ரெட்லியின் வசனங்கள் படத்திற்கு மேலும் சுவாரசியத்தை கூட்டுகிறது என்றே சொல்லலாம். அதுவும் ‘ஏதோ அவன் சக்திக்கு ரெண்டே ரெண்டு லவ்வர் தான் வச்சிருக்கான்’ என்று கிங்ஸ் ரெட்லி சொல்லும் வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மொத்தத்தில் விக்னேஷ் சிவன் ஸ்டைலில் சொல்ல சொன்னால் ’நானும் ரவுடிதான்’ போல ஒரு வித்தியாசமான காதல் கதையாக தான் இந்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் இருக்கும் என இந்த டீசரில் இருந்து தெரிகிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு நேற்று வெளியான இந்த டீசரின் மூலம் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.