சங்கத்துக்காக நிதி திரட்டி, மொத்த பணத்தையும் அமுக்கிய சூப்பர் ஸ்டார்... வெடித்தது அடுத்த சர்ச்சை...

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா.

சங்கத்துக்காக நிதி திரட்டி, மொத்த பணத்தையும் அமுக்கிய சூப்பர் ஸ்டார்... வெடித்தது அடுத்த சர்ச்சை...

சங்கம் என்றாலே சண்டை தான் போலிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த சண்டைகள் பற்றி நாடறியும். விளைவு கட்டடமும் முடியவில்லை, சங்கமும் அரசின் கையில் போய்விட்டது. 

இதற்கு சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது ஆந்திர நடிகர் சங்கம் (மா). இங்கு தேர்தல் நடப்பதற்கு முன்னாலேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள்.

நடிகர் பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்த உடனே சர்ச்சை ஆரம்பமானது. ஆனால், கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் ஆந்திராவில் எப்படி போட்டியிடலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும் கருத்துக்களை சொல்பவர் என்பதால் அவர் போட்டியிட எதிர்ப்புகள் அதிகமாகி இருக்கிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். சிரஞ்சீவி குடும்பத்தினர் பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா எதிரணியான பிரகாஷ்ராஜ், சிரஞ்சீவி ஆகியோரை வெளுத்து வாங்கியிருக்கிறார். 

மா கட்டட நிதிக்காக, சிரஞ்சீவியும் இன்னும் சிலரும் அமெரிக்காவுக்கு நிதி திரட்ட போறாதா சொல்லிட்டு போனீங்களே.. அந்த பணம் என்னாச்சு..?  மா சங்க கட்டடத்துக்காக அரசாங்கத்திடம் இலவசமா இடம் வாங்க வக்கில்ல... தேர்தல்ல நிக்கிறாங்க..!

சங்கத்துக்காக இடம் கொடுத்து கட்டடம் கட்டினது மஞ்சு விஷ்ணு. அவங்களுக்குத்தான் என்னோட ஆதரவு. பிரகாஷ் சிரஞ்சீவி அணிகளை எதிர்க்கிறேன். முடிஞ்சா மோதிப்பாரு என்று  சவால் விடுகிறார் பாலகிருஷ்ணா...