விஜய் நடித்த பீஸ்ட் படக்குழுவின் காதலர் தின பரிசு.. என்ன தெரியுமா.?

விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் பாடல் காதலர் தினத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட் படக்குழுவின் காதலர் தின பரிசு.. என்ன தெரியுமா.?

விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் பாடல் காதலர் தினத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து, நெல்சன் இயக்கும் படம் பீஸ்ட். விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் பிரத்யேக போஸ்டர், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி, பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.