படத்தின் முழு கதையை ஒரு பாடலில் சொல்லமுடியுமா...? ”விக்ரம்’’ படத்தில் சென்ன விஷ்ணு எடவன்..!

படத்தின் முழு கதையையும் ஒரு பாடலில் வெளிப்படுத்தியது ”விக்ரம்’’ படத்தின் ‘போர்க்கண்ட சிங்கம்’ பாடல்....

படத்தின் முழு கதையை ஒரு பாடலில் சொல்லமுடியுமா...? ”விக்ரம்’’ படத்தில் சென்ன விஷ்ணு எடவன்..!

பிரபல இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து, தற்போது தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். கமலஹாசனை தொடர்ந்து விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இப்படம் வருகிற ஜீன் 3 ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பான் இந்திய படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் இந்த படம் குறித்து வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டி வருகிறது. 

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. அதன்படி இப்படத்தில் இருந்து ‘பத்தல பத்தல’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியானது. அனிருத் இசையில் கமலே எழுதி, பாடி, நடனமாடிய இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் எனர்ஜிட்டிக் நடனம் மற்றும் அனிருத்தின் பட்டைய கிளப்பும் இசையுடன் வெளியான இப்பாடல் அதிகமானவர்களின் பார்வையை ஈர்த்துள்ளது. இதனைத்தொடர்ந்து விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியானது. அந்த ட்ரைலரில் கமலுடன் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களும் நடிப்பில் மிரட்டியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த சிங்கிள் பாடலாக “போர்க்கண்ட சிங்கம்”  வெளியாகியுள்ளது. ”உயிரும் நடுங்குதே உன்னை ஏந்திடவே...” எனும் தொடங்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்திலே தந்தையின் கையை விடாமல் பிடித்திருக்கும் குழந்தையின் காட்சிகள் அப்பா - மகன் சென்டிமென்ட்டை அழகாக எடுத்துரைக்கிறது. அத்துடன் இப்பாடலின் வரிகள் கேட்போரின் மனதை கரைய செய்யும் வகையில் இடம்பெற்றுள்ளது. போர்க்கண்ட சிங்கம் பாடலின் வரிகளே படத்தின் முழுகதையையும் சொல்லிவிடுகிறது. இப்பாடலில் தாயை இழந்த குழந்தை, தந்தையின் பாச உணர்வுகளையும், வேதனைகளையும் நடிகர் கமல்ஹாசன் தன் முகபாவனைகளால் அழகாக வெளிப்படுத்துகிறார். முதலில் வெளியான ‘பத்தல பத்தல’ பாடல் கமலின் டான்ஸ், மாஸ் என்று வேற மாதிரி இருந்தால், அதற்கு நேர் மாறாக ‘போர்க்கண்ட சிங்கம்’ பாடல் அப்பா மகன் என உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போர் கண்ட சிங்கம் பாடல் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.