வெளியானது ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘வாடி வாசல்’ சிங்கிள் பாடல்..! இணையத்தில் குவியும் பாராட்டு

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள “தி லெஜண்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “வாடி வாசல்” பாடலின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியானது ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘வாடி வாசல்’ சிங்கிள் பாடல்..! இணையத்தில் குவியும் பாராட்டு

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் அதிபரான லெஜண்ட் சரவணன் நடிப்பில், ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’தி லெஜண்ட்’. இந்தப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே “தி லெஜண்ட்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் மொசோலோ மொசலு சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்ததாக ‘தி லெஜண்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாடிவாசல்’ என்ற பாடலின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை பார்த்தவர்கள் பலரும் பாடலுக்கு அற்புதமான செட் அமைக்கப்பட்டிருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜொனிதா காந்தி மற்றும் பென்னி தயால் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. சினேகன் எழுதியுள்ள இப்பாடலுக்கு ராஜசுந்தரம் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.