வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு...

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு...

வாடிவாசல் சி.சு.செல்லப்பாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே தலைப்பில் உருவாகும் படத்தில் சூர்யா, அப்பா - மகனாக நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

 அதன்படி இன்று டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டைட்டிலில் வெறிகொண்ட அடங்காத காளை ஒன்று வாலை தூக்கியபடி, ஆவேசத்துடன் இருப்பது போன்ற நாணயம் இடம் பெற்றுள்ளது.

 இந்த டைட்டிலை வெளியிட்டுள்ள கலைப்புலி எஸ்.தாணு, 'நம் வீரத்தையும் வரலாற்றை யும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.இந்த டைட்டிலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.