சிவகார்த்திகேயனின் வேற லெவல் டான்ஸில் வெளியானது ”ஜலபுல ஜங்கு” பாடலின் புரோமோ வீடியோ!!

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் ஜலபுல ஜங்கு பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் வேற லெவல் டான்ஸில் வெளியானது ”ஜலபுல ஜங்கு” பாடலின் புரோமோ வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சற்று முன்னர் ‘டான்’ படத்தில் இடம்பெற்ற ஜலபுல ஜங்கு என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அனிருத்தின் அட்டகாசமான குரலில் சிவாவின் வேற லெவல் டான்ஸில் உருவாகியுள்ள இந்த பாடலின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது. ’டான்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த புரோமோ வீடியோவை தற்போது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.