சிவகார்த்திகேயனுக்கு வந்த அரசியல் ஆசை..! சர்ச்சையை உண்டாக்கிய டான் பட டிரைலர்..!

சினிமா பிரபலங்களின் தொடர் அரசியல் ஆசை சரிதானா?

சிவகார்த்திகேயனுக்கு வந்த அரசியல் ஆசை..! சர்ச்சையை உண்டாக்கிய டான் பட டிரைலர்..!

ஓ ஒருவேளை அவருக்கும் அந்த ஆசை வந்துருக்குமோ? வராம இருக்குமா பின்ன? அதான் பப்ளிசிட்டி ஆகியாச்சு, சமுதாய கருத்துகள் சொல்ற மாதிரியான படங்கள் பன்னியாச்சு, குழந்தைகள இருந்து பெரியவங்க வரை ரசிகர்கள் புடுச்சாச்சு பின்ன என்ன? வந்துட வேண்டியது தானே? இப்போ தான் படத்துல அரசியல் பத்தி பேச ஆரம்பிச்சுருக்காரு.. போக போக என்ன நடக்குதுன்னு பாப்போம்... யாரப்பா சொல்றன்னு கேக்குறீங்களா? அவரு தாங்க நம்ம சிவகார்த்திகேயன தான். அவரோட அடுத்த படமான டான் படத்தோட டிரைலர் ரிலீசாகி இருக்குல? அதுல துரை அரசியல் பத்தி பேசியிருக்குறது தான் இந்த டவுட்ட ஏற்படுத்தி இருக்கு. 

சினிமாவுல இருந்து அரசியலுக்கு வரதுங்குறது இங்க புதுசு இல்ல. தமிழ் சினிமாவ பொருத்தவர எம்.ஜி.ஆர் சிவாஜியில இருந்து இப்போ இருக்குற கமல், விஜய் வரைக்கும் எல்லாரும் அரசியல களமிறங்கிட்டாங்க. கமல் கட்சி ஆரம்பிச்சு தேர்தல்கள சந்திச்சுட்டு வராரு. ஆனா தமிழ்நாட்டு மக்கள் அதிகம் எதிர்பார்க்குற விஜய் தான் இன்னும் முழுசா அரசியல இறங்காம, மறைமுகமா எல்லாத்துக்கும் சப்போர்ட் பன்னிகிட்டு இருக்காரு. எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த காம்பினேஷனுக்கு அப்புறமா தமிழ் சினிமாவுல யார அரசியலுக்கு இறக்கலாம்னு தமிழ்நாட்டு மக்கள் காத்துகிட்டு இருக்குற நிலையில, தானா வந்து மாட்டி இருக்காரு நடிகர் சிவகார்த்திகேயன். 

சிவகார்த்திகேயனோட ஸ்டோரிய நா சொல்லி தான் தெரிஞ்சுகனும்னு அவசியம் இல்ல. ஒரு சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்துல பிறந்து இன்ஞ்சினியர் படிச்சு, சின்னத்திரையில மெமிக்ரி ஆர்ட்டிஸ்ட், விஜே, டான்சர், காமெடியன், ஹீரோன்னு படிப்படியா வளந்து இன்னைக்கு சினிமா இண்டஸ்ட்ரீல நுழைஞ்ச கொஞ்ச வருஷத்துக்குள்ளேயே தனக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளத்தையே புடிச்சு வச்சுருக்காரு நடிகர் சிவகார்த்திகேயன். கொரோனா காலகட்டத்துல இவரோட பல படங்கள் அப்படியே நின்னு போச்சு. அந்த வரிசையில டாக்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்ப பெற்ற நிலையில, அடுத்ததா டான் திரைப்படம் ரிலீசுக்கு தயாரா இருக்கு. படத்துல இருந்து ஏற்கனவே வெளியான  பாடல்கள் எல்லாம் ஹிட் அடிச்சு இருக்குற நிலையில, படத்தோட டிரைலர் நேத்து ரிலீசாகி இருக்கு. 

இதுல சிவகார்த்திகேயனோட பிளஸ் பாயிண்ட்டான காமெடி கொஞ்சம் தூக்கலாவும், ஆக்சன், அழுகன்னு ஒரு பக்கா கமர்ஷியல் படமா டான் இருக்கும்னு ஒரு நம்பிக்கைய ஏற்படுத்தி இருக்கு. ஆனா படத்துல பைனல் டச் தான் கொஞ்சம் சலசலப்ப ஏற்படுத்தி இருக்கு. டிரைலர் முடியுறதுக்கு முன்னாடி பேசாம அரசியல குதிச்சுடுவான்னு சிவகார்த்திகேயன் கேட்க, பொய் சொல்ல வேண்டியது இருக்கும்னு ஆர்.ஜே. விஜய் சொல்ல.. ஓ ஹோ கத அப்டி போதான்னு நமக்கு யோசிக்க தோனுது.