படத்தில் தனது ஹீரோ அடிவாங்குவதை உண்மை என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்

துக்குடு  என்கிற தெலுங்கு படத்தில் சோனு சூட் அடிவாங்குவது போன்று காட்சியை பார்த்த அவரது தீவிர ரசிகரான சிறுவன் ஒருவன் டி,வி.யில் கல்லை எறிந்து உடைத்துள்ள சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை சேர்ந்த குருவையா என்பவரின் மகன் விராட். இந்த சிறுவன் நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகனாம். இந்நிலையில், குருவையா தனது மகனை உறவினர் வீட்டு திருமணத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது மகன் விராட், நடிகர் சோனு சூட்-டின் ‘துக்குடு’ என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘துக்குடு’ படத்தில் ஹீரோ மகேஷ் பாபு, வில்லன் சோனு சூட்டை அடித்து துவம்சம் செய்வது போன்று ஒரு சண்டைக் காட்சி இடம்பெற்றிருந்தது. அதனை பார்த்து,தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடிவாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத விராட், மகேஷ் பாபு மீதான ஆத்திரத்தில் டி.வி மீது கல்லை எறிந்துள்ளான்.

இதில் டி.வி உடையும் சத்தம் கேட்டு அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன்பிறகு தான் சிறுவன் விராட், சோனு சூட்டுக்காக டி.வி.யை உடைத்தது தெரியவந்தது. இது குறித்த செய்தியை அறிந்த சோனு சூட், “இதுபோன்று டி.வி.யை உடைக்க வேண்டாம். பிறகு உன் தந்தை என்னிடம்தான் டி.வி. வாங்கி கொடுக்க சொல்லுவார்” என்று தனது குட்டி ரசிகன் விராட்டுக்கு அறிவுரை கூறியுள்ளார்