மாஸ்டர் பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: ‘நச்-சென்று’ பதிலளித்த செளந்தர்யா!

தன்னை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர் ஒருவருக்கு ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகை செளந்தர்யா  ‘நச்’ என பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்டர் பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: ‘நச்-சென்று’ பதிலளித்த செளந்தர்யா!

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பாடகியாக சௌந்தர்யா அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடரான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பேசப்பட்டார். மேலும், பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பாடிய ‘சத்தியமா நான் சொல்லுரேண்டி’ என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘Yours Shamefully’ என்ற குறும்படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் பேராசிரியையாகவும் நடித்திருந்தார்.

இப்படி ஏதாவது ஒரு வகையில் தன்னை மக்களிடம் கனெக்ட்-டில் வைத்திருக்கும் நடிகையும்,  பாடகியுமான செளந்தர்யா அவ்வப்போது சோஷியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இவரிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுவும் குறிப்பாக படுக்கைக்கு வந்தால் எவ்வளவு வேண்டும் என்றுஅவர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  

இதனையடுத்து கேள்வி எழுப்பிய பேராசிரியருக்கு பதிலளித்த நடிகை செளந்தர்யா, இவர் மதுரையில் உள்ள பேராசிரியர். இவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் அப்படிதான் உள்ளது. இவருடைய கல்லூரியில் படிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன், எதற்கும் இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என ‘நச்’ பதிலை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகை செளந்தர்யா பதிவு செய்து உள்ள நிலையில் அந்தப் பேராசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.