வருகிறது 'நானே வருவேன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..! எப்போ தெரியுமா..?

வருகிறது 'நானே வருவேன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..! எப்போ தெரியுமா..?

நடிகர் தனுஷ் நடிப்பில், உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியாவது குறித்த தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

முன்னதாக தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.  நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்துவிட்ட நிலையில், 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 

இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், செல்வராகவன் இயக்கி, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நடிகர் தனுஷுடன் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, என பலர் நடித்துள்ளனர். மேலும், எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நானே வருவேன் திரைப்படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை மாலை 4.40 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "   ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்.. ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம் " என பதிவிட்டு தெரிவித்துள்ளார். இந்த பதிவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருவதோடு, படத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.