வலிமை படத்திற்கு கிளம்பிய முதல் எதிர்ப்பு..! எழுத்து வடிவ சிதைப்பு நடப்பதாக புகார்..!

வலிமை படத்தின் போஸ்டரில் எழுத்து வடிவ சிதைப்பு..!

வலிமை படத்திற்கு கிளம்பிய முதல் எதிர்ப்பு..! எழுத்து வடிவ சிதைப்பு நடப்பதாக புகார்..!

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது வலிமை படத்தின் அப்டேட். பொதுவாக ஒரு படத்தின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகோ, அல்லது அப்படத்தில் நடித்த நடிகரின் அடுத்தப் படம் வெளியான பிறகோ நீடிப்பது இல்லை. எவ்வித அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நமத்து போக வைத்து விடுகிறது. அதன் பிறகு அப்படங்கள் வெளியே வந்தாலும் கூட சொல்லும் அளவு படம் ஓடுவதில்லை. 

உதராணமாக தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா, எஸ்.ஜே.சூரியாவின் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை கூறலாம். அந்த வரிசையில் வலிமை படத்தோட பூஜையானது கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. போனிகபூர் தயாரிப்புல எச்.வினோத் இயக்கத்துல அஜித்குமார், ஹீமா குரேஷி ஆகியோர் நடிக்கவிருப்பதா தகவல்கள் வெளியானது. அது தவிர வேறெந்த தகவல்களையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. 

யுவன் சங்கர் ராஜா இசையில உருவான இந்தப்படத்துல அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் அவ்வப்போது வெளியானது. கொரோனா காலகட்டத்தில் படத்தின் படப்படிப்பு தள்ளிப்போன நிலையில், படம் பற்றின எவ்வித அறிவிப்புமே வெளியாகவில்லை. இருப்பினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டுமே குறையவில்லை. கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, சாமியாடுபவர்கள் வரை அனைவரிடமும் வலிமை பட அப்டேட் கேட்டு கேட்டு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. 

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குநர் எச்.வினோத் கடந்த 11-ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டார். சமூக வலைத்தளங்களே கொண்டாட்டத்தில் பூரித்து போயினர். பல்வேறு வகையில் புதிய புதிய சாதனைகளை வலிமை பட அப்டேட் பெற்று வரும் இந்த சூழலில், முதன் முறையாக இந்த அப்டேட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

வலிமை படத்தில் தமிழ் எழுத்துச் சிதைவு நடைபெற்றுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே நாம் தமிழர்கள் தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறி வந்தாலும் ஒரு செய்தியை ஆங்கில வார்த்தைகள் இல்லாது பேசுவதற்கு திணறி வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. பல ஆங்கில வார்த்தைகள் பேச்சு வழக்கு சொல்லாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட சூழலில் தற்போது வலிமை படம் மூலம் தமிழ் எழுத்துச் சிதைவு உருவாவது கவலை அளிப்பதாக கூறுகின்றனர். 

முதலில் எழுத்துச் சிதைவு என்றால் என்பதை பார்க்கலாம். தமிழில் எழுத்துக்களுக்கு தனி தனி வடிவமைப்பு உள்ளது. ஆனால் இப்போது நாம் பயன்படுத்தும் எழுத்துகள் மருவி மருவி வந்தது என்பது நாம் அறிந்ததே. கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துகளுக்கும், 80, 90-களில் கல்வி பயின்றவர்களின் எழுத்துகளுக்கும், தற்போது நாம் பயன்படுத்தும் எழுத்துகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வ,ல இதுபோன்ற எழுத்துகள் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டு எழுத்துகளுக்கும் வளைவு மட்டுமே வித்தியாசம். ஆனால் இரண்டும் இருவேறு எழுத்துகள். இதைத் தான் எழுத்துச் சிதைவு என்று கூறுவர். 

தற்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடைபெற்றிருப்பதும் இதே தான். அந்த போஸ்டரில் ஸ்டைல் என்று நினைத்து வலிமை என்பதற்கு பதிலாக வவிமை என உருவாக்கப்பட்டுள்ளது. ’ல’-வில் உள்ள வளைவுக்கு பதிலாக ’வி’ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது. இதனை மக்கள் கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் தமிழ் ஆர்வலர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழை வளர்க்க வேண்டும், செம்மைப்படுத்த வேண்டும் என்கிற அரசாங்கம் தமிழ் எழுத்து வடிவத்தைச் சிதைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.