விக்ரம் பிரபுவின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது...!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் பிரபுவின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது...!

கடந்த 2012 ம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன் பின்னர் பல படங்களில் நடித்தவர், முன்னதாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவான டாணாக்காரன் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் விக்ரம் பிரபு நடித்து வரும் புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டனர். அதன் படி தற்போது ரெய்டு என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான கார்த்தி இயக்கத்தில், இயக்குனர் முத்தையா வசனத்தில் உருவாகிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். முன்னதாக வெள்ளைக்கார துரை படத்தில், விக்ரம் பிரபு- ஸ்ரீ திவ்யா கூட்டணி அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் போஸ்ட்டரை ரசிகர்கள் பகிர்ந்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.