இளையராஜா, வெங்கட் பிரபு இணையும் முதல் கூட்டணி...ரசிகர்கள் உற்சாகம்!
மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சென்னை 28,மங்காத்தா, மாநாடு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, பத்தாவது படமாக மன்மத லீலை திரைப்படத்தை இயக்கி முடித்தார். இத்திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகசைதான்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார். தற்காலிகமாக என்சி 22 என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க இருக்கிறார்.
மேலும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இதன்படி இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்தில் தான் இளையரஜாவும் வெங்கட் பிரபுவும் முதல் முதலில் இணைய உள்ளதன் காரணமாக இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. வெங்கட்பிரபு இதுவரையில் அவர் இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜியை வைத்தே இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.