வைகைப் புயலின் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்..! படமே இன்னும் ரிலீஸ் ஆகலையே அதுக்குள்ளயா?

நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை நவம்பரில் வெளியிட திட்டம்..!

வைகைப் புயலின் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்..! படமே இன்னும் ரிலீஸ் ஆகலையே அதுக்குள்ளயா?

நின்றாலே சிரிப்பு:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே நம் நினைவுக்கு வருவது கவுண்டமணி-செந்திலுக்கு அடுத்தப்படியாக வடிவேலுவைத் தான். பிறர் 
எல்லாம் தங்களது நடிப்பாலும், டயலாக்காலும் மக்களை சிரிக்க வைப்பார்கள். ஆனால் இவர் வந்து நின்றாலே நமக்கெல்லாம் சிரிப்பு தானாக வந்துவிடும். 

அரசியலால் வீழ்ந்த சாம்ராஜ்யம்:

தனது டயலாக் டெலிவரியாலும், பாடி லேங்குவேஜ்ஜாலும் பல வருடங்களாக நம்மை சிரிக்க வைத்தவர், அரசியலில் இறங்கியதாலும், 
நடிக்கத் தெரியாமல் பேசியதாலும் சில காலம் சினிமாவில் தலைகாட்ட முடியாமல் போனது. 

மீம் கிரியேட்டர்களின் கடவுள்:

கத்திச்சண்டை, சிவலிங்கா, எலி போன்ற படங்கள் மூலம் அவர் கம்பேக் கொடுத்தாலும், முன்பு இருந்ததை போல அவரால் ஜொலிக்க 
முடியவில்லை. ஆனாலும் இந்த கொரோனா காலகட்டத்தில் அவரது காமெடிகளும், காமெடி கதாபாத்திரங்களும், டயலாக்குகளும் பெருமளவில் சமூக வலைதளங்களில் வைரலானது. மீம் கிரியேட்டர்களின் கடவுளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு. 

அடுத்தடுத்து படங்கள்:

ஃப்ரண்ட்ஸ் என்ற படத்தில் இவர் நடித்த நேசமணி என்ற கதாபாத்திரத்தை வைத்து ஒரு கேம் தயாரிக்கப்பட்டு, குழந்தைகள் மத்தியில் பிரபலமானது. அப்படிப்பட்டவர் மீண்டும் எப்போது சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, இதோ வந்துட்டேன் என அடுத்தடுத்து வரிசையாக படம் நடித்து வருகிறார் வடிவேலு. 

சந்தோஷ் நாராயணன் இசை:

இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில், அவரோடு சேர்ந்து சிவாங்கி, கிங்ஸ்லி, மாறன் என 
பலரும் நகைச்சுவை நடிகர்களும் நடித்திருக்கின்றனர். சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

நெட்பிளிக்ஸ் திட்டம்:

படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வரும் நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே இதன் ஓடிடி உரிமத்தை 
பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சமீப காலமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் திரைக்கு வராத, படப்பிடிப்பில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களை வாங்குவதில் குறியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.