அஜித் வெளியிட்ட நீதிக்கதை பதிவு..! ஸ்தம்பித்து போன சமூக வலைதளம்..!

நடிகர் அஜித் வெளியிட்ட நீதிக்கதையின் பதிவு பார்த்து இணையதளம் முழுவதுமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.

அஜித் வெளியிட்ட நீதிக்கதை பதிவு..! ஸ்தம்பித்து போன சமூக வலைதளம்..!

தமிழ் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். பொதுவாகவே அஜித் தன்னை எதிலுமே ஈடுபடுத்தி கொள்ளமாட்டார். நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர், தன் கருத்தினை தெரிவிக்க வேண்டுமென்றால் கூட தனது மேனேஜரின் சமூக வலைதளபக்கத்தின் மூலமே வெளியிட்டு வருவார். ஏனென்றால் நடிகர் அஜித் எந்தவித சோஷியல் மீடியா பக்கங்களையும் உபயோகிக்கவில்லை என்பதே காரணம்...

இந்நிலையில் சற்றுமுன் அஜித் மேனேஜரின் சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அந்த பதிவு என்னவென்றால் நாம் அனைவரும் சிறு குழந்தையில் கேள்விப்பட்ட நீதி கதை தான். அதாவது ஒரு தம்பதியினர் ஒரு கழுதையுடன் நடந்து செல்லும் போது அதை பார்ப்பவர்கள் கழுதை மீது ஏறி உட்கார்ந்து செல்லாமல் தம்பதியினர் நடந்து செல்கின்றனர் என கேலி செய்து நகையாடினர்.

அதன் பிறகு இருவரும் கழுதை மீது ஏறி சென்றபோது, கழுதையை துன்புறுத்துகிறார்கள் என்று கூறினார்கள். இதனையடுத்து மனைவி மட்டும் கழுதை மேல் உட்கார்ந்து வர, கணவர் நடந்து சென்றார் அதற்கும் தன் மனைவியை முதலாளி போல் உட்கார வைத்து கொண்டு செல்கிறார் இந்த கணவர் என்று குற்றஞ்சாட்டினர். அதற்கு பிறகு கணவர் உட்கார்ந்து வர, ஒரு பெண்ணை நடக்க வைக்கிறான் என்று அந்த கணவனை குற்றஞ்சாட்டினர். அதன் பிறகு கழுதையை இருவரும் தூக்கிக் கொண்டு சென்றபோது கழுதை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு செல்லாமல் இந்த மடையர்கள் கழுதையை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று கூறி வந்தனர்.

இந்த நீதி கதையின் மூலம் குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள்; அவர்களின் கருத்தை காதில் வாங்கி கொள்ளக்கூடாது என்ற கருத்தை நடிகர் அஜித் தனது மேனேஜர் மூலம் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித்திடம் இருந்து வந்த இந்த பதிவு தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.